ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பு செய்வதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 7ஆம் திகதி அமைக்கப்பட்ட இந்த குழுவில் 12 பேர் அங்கம் வகிக்கின்றனர்.
ஸ்ரீலங்கன் விமான சேவையில் ஏற்பட்டுள்ள நட்டங்களை குறைத்து, எதிர்காலத்தில் அந்த நிறுவனத்தை இலாபகரமான நிலைக்கு கொண்டுவருவதற்கான பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதேவேளை, நட்டத்தை எதிர்நோக்கியுள்ள ஸ்ரீலங்கன் விமான சேவையில் 190 பேர் ஒரு மில்லியன் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கோப் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.