முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க, ஏப்ரல் 25 வரையிலும் வாயை மூடிக்கொண்டிருக்க முடிவு செய்துள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் ஆதரவை வழங்காமல் அமைதிகாப்பதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தீர்மானித்துள்ளார்.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து அவர்களுக்கு ஆதரவாக செயற்பட்ட சந்திரிகா ,அந்தக் கட்சிகளுள் தற்போது எழுந்துள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அறிய முடிந்தது.
அத்துடன் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டுள்ள சூழ்நிலையில் இப்போதைக்கு பகிரங்க அரசியல் விமர்சனங்களை மேற்கொள்ளாதிருக்கவும் சந்திரிகா தீர்மானித்துள்ளாரென தெரிகிறது.
கடந்த தேசிய சுதந்திர தின நிகழ்வு – கொழும்பு இந்திய உயர்ஸ்தானிகர் இல்லத்தில் நடந்த உயர்ஸ்தானிகருக்கான பிரியாவிடை நிகழ்வு என்பவற்றில் கலந்துகொண்டிருந்த சந்திரிகா – அங்கு ஆளுங்கட்சி உறுப்பினர்களுடன் மிக நெருக்கமாக சம்பாஷணைகளை மேற்கொண்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.