ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29 ஆவது பேராளர் மாநாடு எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை முற்பகல் 10.30 மணிக்கு கண்டி, பொல்கொல்லை மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. பேராளர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
இரண்டு அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பேராளார் மாநாட்டின் முதல் அமர்வில் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகியோரின் வருடாந்த அறிக்கை, செயற்குழு உறுப்பினர்கள் தெரிவு, பேராளர்களின் கருத்துரை போன்றவை இடம்பெறும்.
பிற்பகல் நடைபெறவுள்ள இரண்டாவது அமர்வில் புதிய உயர்பீட உறுப்பினர்கள் அறிமுகம், ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ;ரப் நினைவு கூரல் நிகழ்வு, தேசியத் தலைவரின் உரை போன்றவை இடம் பெறும்.
நாடெங்கிலுமிருந்து கட்சியின் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேராளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர். விரைவில் பொதுத் தேர்தலை எதிர்நோக்கியுள்ள சூழ்நிலையில் இந்த 29ஆவது பேராளர் மாநாடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையுமெனக் கருதப்படுவதாக முஸ்லிம் காங்கிரஸின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.