web log free
April 09, 2026

5 சிறுபான்மை கட்சிகள் மொட்டுடன் சங்கம்


தாமரை மொட்டு சின்னத்தில் ​போட்டியிடவிருக்கும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பில், முக்கியமான சிறுபான்மை கட்கள் 5 இணைந்துள்ளன.


ஶ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் முதலைச்சர் சி. சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசன் தலைமையிலான   ஜனநாயக மக்கள் காங்கிரஸ், ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய ஐந்து கட்சிகளே இவ்வாறு இணைந்துள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd