web log free
December 12, 2025

குத்துச்சண்டைப் போட்டியில் டயகம மாணவி சாதனை

அகில இலங்கை பாடசாலை மட்ட குத்துச்சண்டை போட்டியின் கனிஷ்ட பிரிவு, 50-52 எடைப்பிரிவில்  ம. மா/நு/சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரியில் தரம் 11இல் கல்வி பயிலும் சி. சபிலாஷினி என்ற மாணவி, இரண்டாம் இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் மலையகத்துக்கும் பெருமைச் சேர்த்துள்ளார். 

 மேற்படி மாணவி, டயகம மேற்கு, 2ஆம் பிரிவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு,  பயிற்றுவிப்பாளராக அதே பாடசாலையில் ஆசிரியராகக் கடமைபுரியும் செ. செபஸ்டிபத்திக்ராஜ் (செபஸ்டியன்)  இருக்கிறார்.

இப்போட்டியானது, இம்மாதம் 15ஆம் திகதியில் இருந்து 19ஆம் திகதி  வரை, மாத்தறை நாரந்தெனிய தேசியப் பாடசாலையில் நடைபெற்றது. 

இப்போட்டிக்காக பாடசாலையில் இருந்து 3 மாணவர்களும் ஒரு மாணவியுமாக நால்வர் அழைத்துச் செல்லப்பட்டனர். 

போட்டியில் மாணவி இரண்டாம் இடத்தை பெற்றதற்காக அவருக்கு வெள்ளி பதக்கம் வழங்கப்பட்டது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd