web log free
June 27, 2026

உள்நாட்டு மதுபான விலை அதிகரிப்பு


உள்நாட்டு மதுபான போத்தல் ஒன்றின் விலை 10 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி உள்நாட்டில் தயாரிக்கப்படும் சகல மதுபான போத்தல்களினதும் விலை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளதாக டிஸ்டிலரிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உற்பத்தி செலவீனங்கள் அதிகரித்துள்ளமையே உள்நாட்டு மதுபான போத்தல்களின் விலை அதிகரிப்புக்கு காரணம் என அந்த நிறுவனம் குறிப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த விலை அதிகரிப்பு தொடர்பில் தற்போது முகாமைத்துவ மட்ட கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd