web log free
February 04, 2026

மைத்திரிக்கு காலக்கெடு

 

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, உயர்நீதிமன்றம், மூன்று வார காலக்கெடுவை இன்று (02) வழங்கியது.

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு மனுக்களை இன்று (02) விசாரணைக்கு எடுத்து கொண்ட போதே, உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு காலக்கெடுவை வழங்கியது.

அவ்விரு அடிப்படை உரிமைகள் மனுக்கள் தொடர்பில், ஏதாவது எதிர்ப்பு இருக்குமாயின் மூன்று வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு, மனுவின் பிரதிவாதியான மைத்திரிபால சிறிசேனவுக்கு காலக்கெடு வழங்கியது.

நீதிமன்றத்தை அவமதித்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்த, ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராகவே இவ்விரு அ​டிப்படை உரிமை மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd