web log free
May 30, 2026

சிரிக்கிறார் ரணில்: திக்கு முக்காடினார் மனோ

சஜித்துக்கும் ரணிலுக்கும் இடையிலான பணிப்போருக்கு இன்னும் முடிவு கட்டப்படவில்லை. இந்நிலையில், பல்வேறு தரப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றது.

இதேவேளை, மனோ கணேசன் தலைமையில் ஒரு குழுவினர் ரணிலை சந்தித்தனர்.

மங்கள, மலிக் ஆகியோர் சற்றுமுன் ரணிலை சந்தித்து 'ஒன்றாய் முன்னோக்கி போவோம். பிளவு வேண்டாம். அது அரசுக்கு வாய்ப்பாக போய் விடும்' என்று கோரினர்.

அதற்கு ரணில், 'அப்படியானால், கூட்டணியை கடாசிவிட்டு வாருங்கள். (பழையபடி முதலில் இருந்து ஆரம்பித்து...) ஐ.தே.கட்சியாக யானையில் போட்டியிடுவோம்' என்று கூறியுள்ளார்.

ரணிலின் இந்நிலைபாட்டுக்கு பிரதான துணைவர்கள் ரவி கருணா, வஜிர அபே, அகிலவிராஜ், சாகல ரத்ன ஆகியோர்.

பிரிவினை வேண்டாமே என கடைசி. கடைசியாக முயற்சித்தாலும்கூட இந்த பெரிய மனுஷன் இப்படி சொல்கிறாரே!

என்ன செய்யலாம், சொல்லுங்க?

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd