web log free
January 05, 2025

பணியாளருடனான உறவு மன அழுத்தத்தை குறைத்தது

வெள்ளை மாளிகையின் பணியாளராக பணியாற்றி மொனிகா லெவின்ஸ்கியுடனான உறவு தனது மன அழுத்தங்களை குறைப்பதற்கு உதவியது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளரும் பில் கிளின்டனின் மனைவியுமான ஹிலாரி கிளின்டன் குறித்த விபரணசித்திரத்தில்  தெரிவித்துள்ளார்.

நான் செய்தது தவறான விடயம்,ஆனால் அது நான் நினைத்தது போன்று இருக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்

நான் ஒரு காலத்தில் தடுமாற்றமாக உணர்ந்தேன்,நான் எனது இரண்டாவது பதவிக்காலத்திலிருந்தேன்,என தெரிவித்துள்ள கிளின்டன் மொனிகா  லெவின்;ஸ்கியுடான  உறவு உங்கள் மனதை நாளாந்த வேலைப்பழுவின் அழுத்தங்களில் இருந்து திசைதிருப்ப உதவியது என குறிப்பிட்டுள்ளார்.

ஓவ்வொருவருக்கும் வாழ்க்கை அழுத்தங்கள்,ஏமாற்றங்கள், அச்சங்கள், பயங்கள் உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ள பில்கிளின்டன் பல வருடங்களாக எனது அழுத்தத்தை குறைப்பதற்காக நானும் முயற்சி செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.

அவருடைய  வாழ்க்கை என்னுடன் அவருக்கு இருந்த உறவை அடிப்படையாக வைத்து அர்த்தப்படுத்தப்பட்டது மோசமான விடயம் எனவும்  பில் கிளின்டன் தெரிவித்துள்ளார்.

நான் அவருடைய வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்புமா என்பதை பல வருடங்களாக அவதானித்து வந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.

1990களில் பில்கிளின்டன் மொனிகா லெவென்ஸ்கி  விவகாரம்  சர்வதேச கவனத்தை பெற்ற விவகாரமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதலில் தன்மீதான  குற்றச்சாட்டுகளை நிராகரித்த பில்கிளின்டன் பின்னர் நெருக்கமான பொருத்தமற்ற உடல் ரீதியான தொடர்புகளை கொண்டிருந்ததை ஏற்றுக்கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து பில்கிளின்டனிற்கு எதிராக அரசியல் கண்டனப்பிரேரணை கொண்டு வரப்பட்டது. எனினும் செனெட்டின் விசாரணை அவரை விடுவித்தது.

மொனிகா லெவென்ஸ்கி ஜனாதிபதியுடனான தனது உறவு சம்மதத்துடனானது  என தெரிவித்திருந்த அதேவேளை அதனை அதிகார துஸ்பிரயோகம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அவ்வேளை இந்த உறவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து நான் உணரவில்லை பின்னர் கவலையடைந்தேன் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd