web log free
April 07, 2026

மண்ணை தூவிய ரவி- மனுதாக்கல் செய்தார்

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

தன்னை கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், ரவி கருணாநாயக்க ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வௌ்ளிக்கிழமை பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரவி கருணாநாயக்கவை கைது செய்வதற்கு, 25க்கும் மேற்பட்ட சி.ஐ.டியினர், இரவு பகலாக அவரை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last modified on Tuesday, 10 March 2020 06:22
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd