web log free
July 02, 2025

கப்புவாவின் மனைவியை களவெடுத்த கயவன்

தன்னைவிட்டு தலைமறைவாகியிருக்கும் மனைவியை தேடி கண்டுப்பிடிப்பதற்காக கப்புவாவிடம் சென்ற வாட்டசாட்டமான இளைஞன், கப்புவாவின் மனைவியை களவெடுத்து கொண்டு சென்றுவிட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

வாட்டசாட்டமான அந்த இளைஞனின் இளம் மனைவி, மற்றொருவருடன் ஒரே கூரையின் கீழ், ஒன்றாக குடும்பம் நடத்தி வருகின்றார்.

மனைவியை தேடிவந்தவரிடம் நிபந்தனைகள் சிலவற்றை விதித்த கப்புமாதியா, தேவாலயத்தை கழுவி, தேவாலயத்தை சுற்றி கூட்டி, சுத்தம் செய்துவிட்டு, பரிகாரங்களை செய்யுமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதன்படியே சேவகம் செய்த இளைஞன், தன்னுடைய கடை கண்களால், கப்புவாவின் இளம் மனைவிக்கு லுக் விட்டுள்ளார். இருவருக்கும் இடையில் கண்களால் உரசல் ஏற்பட, கையடக்க தொலைபேசி இலக்கங்களும் மாற்றிக்கொள்ளப்பட்டன.

கம்புவா, தேவாலயத்தில் பூஜை வழிபாடுகளில் ஈடுபடும் போது, இளைஞனோ, கப்புவாவின் மனைவியுடன் காதல் சல்லாபங்களில் ஈடுபட்டுள்ளார்.

இருவரும் பறந்து செல்வதற்கு தீர்மானித்துவிட்டனர். ஒருநாள், கப்புவா தேவாலயத்துக்கு வெளியே சென்றிருந்த போது, தேவலாயத்துக்கு வந்திருந்த அந்த இளைஞன், கப்புவாவின் இளம் மனைவியை, கொத்தாக கொத்திக்கொண்டு பறந்துவிட்டார்.

திரும்பி வந்த கப்புவா, இளம் மனைவி​யை காணாது பரிதவித்தார். இறுதியில் பொலிஸ் நிலையத்துக்கு சென்று தன்னுடைய மனைவியை தேடி தருமாறு முறைப்பாடு செய்துள்ளார்.

தன்மனைவியை தேடிதருமாறு கப்புவாவிடம் வந்த இளைஞன், கம்புவாவின் மனைவியை கவர்ந்து இழுத்துகொண்டு பறந்துவிட்ட சம்பவம், களுத்துறையிலேயே இடம்பெற்றுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd