web log free
April 07, 2026

முரண்டுபிடித்த மைத்திரி- மஹிந்தவுடனே ஒட்டினார்

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஒன்றாக இணைந்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொர்வில் நேற்று (11) பிற்பகல் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், தற்போது பல மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்களால் வேட்பு மனுக்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, தேர்தல் செயற்பாடுகள் சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுவதாகவும் தமது கூட்டணி வெற்றிப் பெறும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd