web log free
December 27, 2024

கொரோனா தொற்றியோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்

இத்தாலியிலிருந்து வந்தவர்கள் இருவர் தமது நோய்த் தொற்றை மறைத்துகொண்டே இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க, கொரோனா ​தொற்றுக்கு ஆளானவர்களின் தொகை மேலும் அதிகரிக்கலாம் என்றார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்த அவர், 

இத்தாலி போன்ற நாடுகளிலிருந்து இலங்கைக்கு அந்த நோய் வருவதாக தெரிவித்த அவர்,  அதனாலேயே இத்தாலி, ஈரான்,தென் கொரியாவிலிருந்து வருவோ​ரை தனிமைப்படுத்தி ஆராய தீர்மானித்திருந்தாகவும் தெரிவித்தார். 

1600 க்கும் மேற்பட்டவர்கள் தற்போதும் தனிமைப்படுத்தபட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும், பிரான்ஸ், ஸ்பெய், ஒஸ்ரியா,பஹ்ரேன்,கடார் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து விமான பயணிகளை ஏற்றிவருவதை இலங்கை தடை செய்துள்ளது என்றார். 

எவ்வாறாயினும், இந்த அச்சுறுத்தல் நிலைமை மேலும் வலுவடைய முடியுமென தெரிவித்த அவர், தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வுக்கு முகம்கொடுக்காமல் வெளியே உள்ளவர்கள் வாயிலாக சமூகத்துக்கு பரவ முடியும் என்றார். 

இலங்கையில் இதுவரையில் பெருமளவிலான சமூகக் கட்டமைப்புக்குள் பரவும் அபாயம் இல்லையென தெரிவித்த அவர்,  இரு வாரங்கள் முறையாக செயற்படும் பட்சத்தில் நிலைமையை வெற்றிகொள்ள முடியும் என்றார்.

எவ்வாறாயினும் இன்று கண்டுபிடிக்கப்பட்டவர்கள், இத்தாலியிலிருந்து வரும்போதே இத்தாலியிலிருந்து நோய் பீடிக்கபட்டு வந்தவர்கள் என்பதோடு, அவர்களால் கந்தகாடு தனிமைப்படுத்தபட்ட ஆய்வங்களில் உள்ளவர்கள் தொடர்பில் விஷேட அவதானம் செலுத்த வேண்டிய நிலைமை இருந்துள்ளது என்றார்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd