கடந்தவாரம் சிங்கள பௌத்த சம்பிரதாயப்படி திருமணம் செய்துகொண்ட எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவின் இளைய புதல்வரான ரோஹித்த ராஜபக்ச கொழும்பிலுள்ள முன்னணி ஆலயத்தில் தமிழர் சம்பிரதாயப்படி மாலை மாற்றி திருமணம் செய்துகொண்டார்.
எதிர்கட்சித் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூன்றாவது புதல்வரான ரோஹித்த ராஜபக்ச ஜனவரி 24 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் மெதமுலனவிலுள்ள அவரது பூர்வீக இல்லத்தில் டட்டியானா ஜயவரத்னவை திருமணம் செய்துகொண்டார்.
இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பிலுள்ள மயூராபதி ஆலயத்தில் சைவ முறைப்படி மஹிந்தவின் மூன்றாவது புதல்வர் ரோஹித்த ராஜபக்ச டட்டியானா ஜயவரத்னவை திருமணம் செய்துகொண்டார்.
முதலில் சிங்கள பாரம்பரிய முறையில் திருமணம் இடம்பெற்ற நிலையில், நேற்றைய தினம் கிரிஸ்தவ முறைப்படியும் இன்றைய தினம் தமிழ் பாரம்பரிய முறைப்படியும் கிருலப்பனையில் அமைந்துள்ள மயுராபதி ஆலயத்தில் விசேட பூஜைவழிபாடுகளுடன் இந்த திருமண நிகழ்வு இடம்பெற்றது.