கேகாலை சிறைச்சாலையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நபர், அடுத்த வழக்கு வரையிலும் கேகாலை சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், இத்தாலியிலிருந்து வந்தவர் என்றும், தடுப்பு முகாமுக்கு செல்லாமல் சிறைச்சாலையில் அனுமதிக்கப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதனை அடுத்தே, இவ்வாறு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
பொலன்னறுவையை சேர்ந்த 37 வயதான நபரே வ்வாறு இத்தாலியிலிருந்து இலங்கைக்கு கடந்த 8ஆம் திகதியன்று வருகைதந்துள்ளார் என்ற அறியமுடிகிறது.