அனுராதபுரம் சிறையில் பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்கு உள்ளான ஒருவர் கண்டறியப்பட்டதை அடுத்து, அங்கு பதற்றம் ஏற்பட்டது.
அங்கு தீ பரவலும் ஏற்பட்டுள்ளது,
அதனையடுத்து அங்கு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதியொருவர் பலியாகியுள்ளார்.
மேலும் மூன்று கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, விசேட அதிரடிப்படையினர் சிறைச்சாலைக்கு பாதுகாப்பு கடமைகளுக்காக விரைந்துள்ளனர்.