இலங்கையில் தற்போதைக்கு 10 ஆயிரம் பேர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து தடுப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் செயலணி அறிவித்துள்ளது.
இவர்கள், சுகாதார பிரிவினர், இராணுவம், புலனாய்வு பிரிவினர் மற்றும் பொதுமக்கள் சுகாதார பரிசோதகர்களால் இனங்காணப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல, இலங்கையில், 22 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் உள்ளன. அதில், 3063 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வெளிநாடுகளைச் சேர்ந்த 31 பேரும் அடங்குகின்றனர்.
இலங்கையில் இனங்காணப்பட்ட, கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை 77 ஆயரும். அதில், 69 பேர், அங்கொட ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையோர், அனுராதபும், வெலிகந்த ஆகிய வைத்தியாசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.