கொரோனா வைரஸ் தொற்று வியாபிக்காமல் இருப்பதற்காக, இன்னும் இரண்டு வாரங்களுக்கு (அதாவது 14 நாட்களுக்கு ) பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துமாறு பேராசிரியர் ஜயசுமன தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான நோயாளர்களின் எண்ணிக்கை, அதிகரித்துள்ளது. இது இன்னும் இரண்டு வாரங்களுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும் என்றும் அதரிவித்தார்.
சீனா, இத்தாலி, ஸ்பானியா ஆகிய நாடுகளிலும் இவ்வாறான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வைரஸ் உடலில் தொற்றியிருக்கும் போது, சமூகத்தில் சாதாரணமாக பலரும் சுற்றிதிரியலாம். அவ்வாறனவர்களை தனிமைப்படுத்தி கொள்வதற்கு, இன்னும் இரண்டு வாரகாலம் தேவைப்படும். ஆகையால், ஊரடங்கு சட்டத்தை நீடிப்பது அத்தியாவசியமாகும் என்றார்.