இலங்கையின் அநுராதபுரம் சிறையில் கைதி ஒருவருக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டது. இதனால் அச்சமடைந்த சக கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து கைதிகளின் வன்முறைகளைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 2 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.
கொரோனா அச்சம் தாக்குமோ என்ற பீதியில் கொலம்பியாவின் பகோடா சிறையில் இருந்து கைதிகள் தப்ப முயன்றதால் பெரும் வன்முறை வெடித்தது. இதில் 23 பேர் பலியாகினர். 83 பேர் படுகாயமடைந்தனர்.
கொரோனாவின் தாக்கம் உலக நாடுகளில் சிறைக் கைதிகளையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தின் டம்டம் மத்திய சிறையில் கைதிகள் தங்களை விடுவிக்க கோரி பெரும் போராட்டம் நடத்தினர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இதேபோல் கொலம்பியாவின் பொகோடா சிறையில் கைதிகள் தங்களை விடுவிக்கக் கோரி வன்முறைகளில் இறங்கினர். இது மிகப் பெரும் மோதலாக வெடித்தது. இம்மோதல்களில் பலியானோர் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 83 பேர் படுகாயமடைந்துள்ளனர். கொலம்பியாவில் இதுவரை 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறையில் யாருக்கும் கொரோனா தாக்கம் இல்லை என்று அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.