எட்டு மாவட்டங்களை தவிர்த்து, ஏனைய மாவட்டங்களி்ல் இன்றுகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்ட ஊரடங்கு சட்டம், பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் பிறப்பிக்கப்படவுள்ளது.
இந்த ஊரங்கு மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு குறித்த பகுதிகளில் அமுலுக்கு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் வடக்கில், யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, மன்னார் மற்றும் முல்லைத்தீவு உட்பட 05 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு காலை 06 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.
மேலே குறிப்பட்ட 8 மாவட்டங்களிலும் அமுலில் இருக்கும் ஊரடங்கு, நாளை 24 ஆம் திகதி காலை 6 மணிவரையிலும் நீடிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.