web log free
June 28, 2026

போதைப்பொருளுடன் ஈரான் நாட்டு பெண் கைது

ஈரான் நாட்டு பெண்ணொருவர் போதைப்பொருளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டாரில் இருந்து இன்று அதிகாலை நாட்டுக்கு வந்த குறித்த பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

அவரது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 400 கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd