கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பதற்காக, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம், பல்வேறான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது.
இதில், ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அந்த ஊரடங்கு சட்டத்தை மதிக்காமல், அச்சட்டத்தை மீறி, 2036 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட 20 ஆம் திகதி மாலை 6 மணிமுதல், 23 ஆம் திகதி இரவு 9 மணிவரையிலான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த காலப்பகுதியில், பயணித்த முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட 501 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன