கொரோனா வைரஸ் முழு உலகத்தையும் ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் நிலையில் சீனாவில் யுனாத் மாகாணத்தில், ஹன்டா எனும் புதுவகையான வைரசால், ஒருவர் மரணமடைந்துள்ளார்.
பஸ்ஸொன்றில் பயணித்து கொண்டிருந்த போது, இந்த நபர் மரணமடைந்துள்ளார். அதனையத்து அந்த பஸ்ஸில் பயணித்த சகலரும் இறக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்களின் பிரகாரம் ஹன்டா வைரஸ், மிருகங்களிடமிருந்து மனிதனுக்கு பரவுகிறது.
எலி மூலமாக மனிதனுக்கு பரவும் இந்த வைரஸ், மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவாது.
தலைவலி, தசை வலி, வயிற்று வலி, தலைச்சுற்றல், வாந்தி மற்றும் காய்ச்சல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
ஹன்டவைரஸ் தொற்று பொதுவாக காடுகள், நெல் வயல்களில் இருந்தும் கிராமப்புறங்களிலும் ஏற்படுகிறது.
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, அர்ஜென்டினாவில் 2013 முதல் 2018 வரை 114 பேர் வைரஸ் காரணமாக இறந்தனர்.
2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் மும்பையைச் சேர்ந்த 12 வயது சிறுவன் வைரஸால் இறந்தார்.
வைரஸ் தொற்றுநோய்களின் இறப்பு விகிதம் 18.6%, சில பகுதிகளில் இது 40% க்கு அருகில் உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.