web log free
October 18, 2024

ஏப்ரல் 6 வரை ஊரடங்கு?

மார்ச் 30 ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டு மறு அறிவித்தல் வரையிலும் அந்த ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஊரடங்கு சட்டம், ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரையிலும் நீடிப்பதற்கு அரசாங்கம் ஆலோசித்து வருவதாக அறியமுடிகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில், கடந்தவாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, இதுதொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், ஏப்ரல் 6 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது.

அதன் பின்னர், 7 மற்றும் 8 ஆம் திகதிகளை தவிர்த்து, ஏப்ரல் 15 ஆம் திகதி வரையிலும் விடுமுறை என்பதனால், அரசாங்கம் இவ்வாறு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அறியமுடிகின்றது. 

 

Last modified on Monday, 06 April 2020 03:29