பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கு விசாரணைகளில் இருந்து நீதிபதியொருவர் விலகியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கி உத்தரவிடுமாறு கோரிக்கை கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷர்மிளா கோணவல மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் இருந்தே மேன்முறையீட்டு நீதிமன்றின் பதில் தலைமை நீதிபதி தீபாலி விஜேசுந்தர விலகியுள்ளார்.
இந்த மனுவினை விசாரணை செய்வதற்காக நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அர்ஜுன ஒபே சேகர நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், குறித்த மேன்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தனிப்பட்ட காரணத்திற்காக தான் விலகுவதாக நீதிபதி தீபாலி விஜேசந்தர அறிவித்திருந்தார்.
இதனை அடுத்து, மற்றுமொரு நீதிபதியை நியமிப்பதற்காக நாளைய தினம் குறித்த மனு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.