கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் மரணிக்கும் இலங்கை பிரஜைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் புங்குடு தீவைச் சேர்ந்த இலங்கையர் சுவிட்ஸர்லாந்தில் மரணமடைந்தார்.
அதேபோல, மாரவிலவைச் சேர்ந்தவர், ஐ.டி.எச். வைத்தியசாலையில் மரணமடைந்தார். அவரே இலங்கையில் கொரோனாவால் மரணமடைந்த முதல் இலங்கையர் ஆவார்.
இந்நிலையில், பிரித்தானியாவில் இலங்கையர் ஒருவர் இன்று (29) மரணமடைந்துள்ளார்.
பெல்தம் பகுதியில் 55 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.