கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக சென்னை காவல்துறையினர் கொரோன தலைக்கவசமொன்றினை உருவாக்கியுள்ளனர்.
உள்ளுர் கலைஞர்களுடன் இணைந்து சென்னை காவல்துறையினர் இந்த கொரோன தலைக்கவசத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்தியா முடக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதை தடுப்பதற்காகவும் இந்த தலைக்கவசத்தை தமிழக காவல்துறையினர் பயன்படுத்துகின்றனர்.
கௌதம் என்ற கலைஞர் ஒருவரே இந்த தலைக்கவசத்தை வடிவமைத்துள்ளார்.
பொதுமக்கள் கொரோன வைரஸ் குறித்து உரிய கவனம் செலுத்துகின்றார்கள் இல்லை என குறிப்பிட்டுள்ள கௌதம் மறுபக்கத்தில் காவல்துறையினர் மக்கள வீடுகளில் இருப்பதை உறுதி செய்வதற்கும் அவர்கள் வெளியே அதிக தூரம் செல்லமாலிருப்பதற்கும் முயல்கின்றனர் இதன் மூலம் வைரசை கட்டுப்படுத்த முயல்கின்றனர் என தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக எனக்கு ஒரு யோசனை தோன்றியது நான் உடைந்த தலைக்கவசம் ஒன்றையும் பேப்பர்களையும் பயன்படுத்தி இதனை செய்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.