உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் கொரோனா தொற்று பரவியுள்ளது.
தற்போது வரையில் இலங்கையில், 113 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்செய்யப்பட்டுள்ளதுடன், விசேட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கையில் கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் இருக்கும் வகையில், தலைமை பிக்குகளால் பிரித் ஓதப்பட்ட நீர் கொழும்பு உள்ளிட்ட பகுதிகளுக்கு வானில் இருந்து தெளிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை நேற்று இடம்பெற்றுள்ளது. கட்டுநாயக்க மற்றும் கொழும்பு நகரப் பிரதேசங்களுக்கு விசேட ஹெலிகொப்டர் மூலம் குறித்த நீர் தெளிக்கப்பட்டது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றினால் தற்போது வரையில் உலகம் முழுவதும் 656,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.