கண்டி, அக்குறணை கிராமமும் புத்தளம் கடையன்குளம் ஆகிய இரண்டு கிராமங்களும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
அந்த பிரதேச மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுது்தும் வகையிலேயே இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரையிலும் கிராமத்துக்குள் நுழைவதற்கும் கிராமத்திலிருந்தும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு கிராமங்களிலும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் இருவர் கண்டுப்பிடிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.