2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதியன்று நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூழ்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்துவதற்கு திட்டம் தீட்டினார் என்ற சந்தேகத்தில் கல்கிஸை பிரதேசத்தை சேர்ந்தவரே, இன்று (29) சி.ஐ.டியினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தெஹிவளையை வசிப்பிடமாகக் கொண்ட (40) நபரே, கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.
இதேவேளை, கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல் நடத்திய தற்கொலைதாரியை வழிநடத்திய நபர் என்றும் மேலதிக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.