கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து அதனை கட்டுப்படுத்துவதற்காக, முழு உலகமே திமிறிகொண்டிருக்கின்றது.
இந்நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சட்டங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருக்கின்றன.
அவுஸ்திரேலியாவில், திருமணம் வைபவத்துக்கு ஐந்து பேரும், மரண வீட்டுக்கு ஏழு பேர் மட்டுமே செல்லமுடியும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முகக் கவசங்களை அணிந்துகொண்டு திருமண வைபவங்கள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில், சென்னையில் கொரோனா தூரத்தை பின்பற்றி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.