கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் புதிய தகவல்களை சுகாதார அமைச்சின் விஞ்ஞானப்பிரிவு சற்றுமுன்னர் வெளியிட்டது.
அதனடிப்படியில், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 120 ஆகும்.
அதில் ஆகக் கூடுதலாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே உள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 29 பேர் பாதிக்கப்பட்டுள்னர்.
களுத்துறை மாவட்டத்தில், 18 பேரும்
கம்பஹா மாவடத்தில் 10 பேரும்
புத்தளம் மாவட்டத்தில் 15 பேரும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 3 பேரும் அடங்குகின்றனர்.
குருநாகல், காலி, கேகாலை, மட்டக்களப்பு, பதுளை, யாழ்ப்பாணம், மாத்தறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.