web log free
October 18, 2024

கோத்தாவுக்கு எதிராக 2 வழக்குகள்

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்படுவதற்கான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. 

 

மிருசுவிலில் எண்மர் படுகொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான எதிரியான முன்னாள் இராணுவ வீரர் சுனில் ரத்நாயக்க, ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவினால்
பொதுமன்னிப்பில் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக இரு வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவிராஜா தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கில் மரணதண்டனை அளிக்கப்பட்ட பிரதான எதிரி பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டமை தொடர்பான செய்தியை வெளியிட்ட அரச ஊடகமொன்று,“நல்லாட்சி அரசின் காலத்தில் அரச சார்பற்ற நிறுவனங்கள், மேற்குலக நாடுகள் மற்றும் தமிழ் புலம்பெயர் தரப்பினர் ஆகியோரை திருப்திப்படுத்தவதற்காக இராணுவ வீரர்களை இலக்கு வைத்து தாக்கல்
செய்யப்பட்ட வழக்குகளில் ஒன்றான மிருசுவில் வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பொதுமன்னிப்பளித்துள்ளது” சுட்டியுள்ளது
.
இத்தகைய பிரதிபலிப்பானது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை அவமதிப்பதாக உள்ளது. ஆகவே அவ்விடயத்தினை குறிப்பிட்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்று எதிர்வரும் நாட்களில்
தாக்கல் செய்யப்படவுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்பில் காணப்படுகின்ற அதிகாரத்தினை ஜனாதிபதி தவறாக பயன்படுத்திமைக்கு எதிராக அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றும் தாக்கல்
செய்யப்படவுள்ளது என்று சட்டத்தரணி தவராசா மேலும் தெரிவித்துள்ளார்.