web log free
December 22, 2024

விஸ்கி குடித்த கோழிகள் சிக்கின

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், ஊரடங்கு சட்டத்தை மீறுவோரை கைதுசெய்வதற்கு பல இடங்களிலும் வீதிசோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் போது, அத்தியாவசிய பொருட்களை ஏற்றியிறக்குவதற்கு விசேட அனுமதிகளும் வழங்கப்படுகின்றன.

இந்த அனுமதியை பெற்றுக்கொண்ட பலர், சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

இந்நிலையில், அத்தியாவசிய தேவையென அறிவித்து, அதிகூடிய குளிரூட்டப்பட்ட லொறியில், கோழி இறைச்சியை சிலர் ஏற்றிவந்துள்ளனர்.

அந்த கோழி இறைச்சிக்குள் விஸ்கி உள்ளிட்ட வெளிநாட்டு மதுபானங்கள் மற்றும் சிகரட் வகைகளை மறைத்து வைத்து, ஏற்றிவந்த மூவர் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் மூவரும் ரத்தொழுகம பொலிஸாரினால் கைதுசெய்யப்படடனர். 

ஜா-எலயில் இருந்து ரத்தொழுகமவுக்கு இவ்வாறு ஏற்றிவந்த போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்தே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனத் தெரிவித்த பொலிஸார், அந்த லொறியை தம்வசப்படுத்தியுள்ளதாக தெரிவித்தனர்.

இதேவேளை, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd