கொழும்பு நகரில் விசேட பாதுகாப்பு பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கக்கூடிய 16 இடங்களில், பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் வீதி தடை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொழும்புக்குள் அத்திவாவசிய தேவைகளுக்காக பயணிப்போர் சுகாதார ஒழுங்கு முறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பு நகரில், கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.