web log free
May 09, 2025

கட்டுநாயக்கவில் வருகிறது மாற்றம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு எற்படும் காலதாமதத்தை குறைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

சில சந்தரப்பங்களில் பயணிகள் கடும் நெருக்கடி மற்றும் சிரமங்களை எதிர்நோக்குவதாகவும், பயணிகளின் வருகை அதிகரிக்கும் போது இதனை அவதானிக்க முடியும் என்றுத் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பயணிகளுக்கு சிறந்த சேவையினை வழங்குவதற்கு புதிய தீர்வினை முன்வைக்கவுள்ளதாகவும், எனினும் இதற்கு நீண்டகால தீர்வொன்று அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த கலந்துரையாடலில் அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்களங்களின் உயர் அதிகாரிகளும் பங்கேற்றிருந்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd