கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட, இது தொடர்பில் ஜனாதிபதி, நீதியமைச்சு ஆகியவற்றுக்கு மனுவினை இன்றைய தினம் கையளித்துள்ளார்.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுவிப்பதாக இருந்தால் சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், முன்னதாக தனக்கு அறிவிக்க வேண்டும் என, அந்த மனுவில் சந்தியா எக்னெலிகொட கோரிக்கை விடுத்துள்ளார்.
மனுவினை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய தினமான பெப்ரவரி 4ஆம் திகதி ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் கலகொட அத்தே ஞானசார தேரர் விடுதலை செய்யப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்த நிலையில், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட வழக்கில் தான் சாட்சியாளர் என்ற ரீதியில் சாட்சிகளை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், ஞானசார தேரரை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்வதாக இருந்தால் அது தொடர்பில் சாட்சியாளரான எனக்கு முன்னதாக அறிவிக்க வேண்டும் என, ஜனாதிபதிக்கு மனு கையளித்துள்ளதாக சந்தியா எக்னெலிகொட கூறியுள்ளார்.