web log free
June 13, 2026

ஊரடங்கு- புதிய அறிவிப்பு இதோ

நாடு முழுவதும் தற்போது அமுலில் இருக்கும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

ஏற்கனவே, தளர்த்தப்படாமல் இருக்கும் ஆறு மாவட்டங்களை தவிர, ஏனைய 19 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம், நாளை (06) காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

பின்னர், பிற்பகல் 2 மணிக்கு ஊரடங்கு சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், கொழும்பு, யாழ்ப்பாணம், கம்பஹா, களுத்துறை, புத்தளம் மற்றும் கண்டி முதலான மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரங்கு சட்டம் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய பணிகளுக்காக மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளது.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd