பல மாவட்டங்களுக்கு அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம், இன்றுகாலை 6 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனினும், கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க பொலிஸ் அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில், பொலிஸ் ஊரடங்கு சட்டம், விசேடமாக அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பில், அந்த பிரதேசத்துக்கு, ஒலிபெருக்கிகள் ஊடாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரநாயக்க தெபத்தகமவில், இளைஞன் ஒருவன் திடீரென மரணமடைந்துள்ளார்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டது.
அவ்விளைஞன் உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை. இதனால் மக்களிடத்தில் பெரும் சந்தேகம் ஏற்பட்டது.
மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் பீதியை இல்லாமல் செய்வதற்கே விசேட ஊரடங்கு சட்டம் அப்பகுதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இளைஞனின் சடலம், வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளது. மரண பரிசோதனைகள் நிறைவடைந்ததன் பின்னரே, திடிர் மரணத்துக்கான காரணம் வெளியாகுமென பொலிஸார் தெரிவித்தனர்.