web log free
July 02, 2025

திருமண அழைப்பிதலுடன் ஒருவர் கைது

தன்னுடைய மகளின் திருமண அழைப்பிதழை வைத்திருந்த ஒருவர், கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம், கண்டி அலவத்துகொடையில் இடம்பெற்றுள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவருடன் காரொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. அக்கார், வாடகைக்கு அமர்த்தப்பட்டு என்று அறியமுடிகின்றுது. 

ஊரடங்கு உத்தரவு நேரத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக வாடகைக் காரின் 'அத்தியாவசிய சேவைகள்' விளம்பரத்தை செய்து, அலவதுகொடா-பூஜாபிட்டி வீதியில் பயணித்துகொண்டிருந்த அந்த காரை, வீதிசோதனை சாவடியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். 

இந்த காரில், எந்தவொரு அத்தியாவசிய சேவை பொருட்களையும் அல்லது அது கொண்டு செல்லப்பட்டதற்கான அறிகுறிகளையும் காணவில்லை, மேலும் அவர் தனது மகளின்  திருமண அழைப்பிதழ்களை வழங்கியதாக அடையாளம் காணப்பட்டார்.

அதன்படி, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். திருமண அழைப்பிதழை வழங்கு நோக்கத்துக்கா பயன்படுத்தப்பட்ட காரும், பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. 

கைது செய்யப்பட்ட நபரை, அந்த வாகனத்துக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd