இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நேற்றைய தினம் உயிரிழந்த ஆறாவது நபர் தெஹிவளை சேர்ந்த 80 வயதான நபர் ஆவார். அவர் தொடர்பான தகவல்களை சுகாதார பிரிவு வெளியிட்டுள்ளது.
தெஹிவளை, அருனாலோக்க மாவத்தையை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மார்ச் மாதம் 27ஆம் திகதி களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் மார்ச் மாதம் 30ஆம் திகதி கொரோனா நோய் பாதிப்பிற்குள்ளாகிமை கண்டுபிடி்க்கப்பட்டது.
குறித்த நபரின் மகளின் கணவர் ஒரு சுற்றுலா வழிக்காட்டி ஆவார். அவர் உட்பட உயிரிழந்த நபரின் மனைவி மற்றும் பேரன் ஆகியோரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நிலையில் அங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
உயிரிழந்த நபரின் உடல் தகனம் செய்யும் நடவடிக்கை நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் மொத்தமாக உயிரிழந்த ஆறு பேரில் நான்கு பேர் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.