web log free
December 22, 2024

விகாரையில் ஒருவர் மரணம் – உறவினர்கள் சந்தேகம்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளவில் அமைக்கபட்டுள்ள பௌத்த ஆலயத்தில் கடமையாற்றிய ஒருவர் ஆலய வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் .

 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த நபர் நேற்று கடந்த (05-04-2020) இரவு நித்திரைக்குச் சென்ற நிலையில் நேற்று முன்தினம் (06-04-2020) காலை அவர் எழுந்து வராத நிலையில் அங்கு இருந்தவர்கள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளார் .

சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் குறித்த இடத்திற்கு வருகை தந்த பொலிஸார் மற்றும் தடயவியல் போலீசார் ஆகியோர் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி உள்ளிட்டவர்கள் சென்று குறித்த நபரின் உடலை பார்வையிட்டதோடு உயிரிழந்தவருடைய உறவினர்கள் குறித்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததன் அடிப்படையில் உடலம் மருத்துவ பரிசோதனைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டுள்ளது .

குறித்த மருத்துவ பரிசோதனைகள் இன்றையதினம் (08-04-2020) இடம்பெற உள்ளன. குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 2016 ஆம் ஆண்டு முதல் குறித்த விகாரையில் இறந்த விகாராதிபதியுடன் கடமையாற்றி வந்த ஜனகபுர பகுதியை சேர்ந்த கமகே நிமால் கருணாரத்ன என்கின்ற 47 வயதுடைய நபர் ஆவார் .

இவருடைய தங்கையார் குறித்த அவருடைய மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து இருக்கின்றார் மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd