கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் உலகளாவிய ரீதியில் மிகவேகமாக அதிகரித்து வரும் நிலையில், 'எமலோகத்தில் இடமில்லை எனவே வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள்' என எழுதப்பட்ட வாசகங்கள் ஆங்காங்கே காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இது இலங்கையில் அல்ல இந்நதியாவில், திண்டுக்கல் பொலிஸார் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த பேனர்கள் வைத்து விழிப்புணர்வுவை ஏற்படுத்தியுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்கும்போது பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் பொலிஸாரும் பல்வேறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.