இலங்கையில் 16 வயதுக்கும் குறைந்த சிறுவர்களில் 21 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய், தொடர்பான விசேட தை்திய நிபுணர் பபா பலிகவர்தன தெரிவித்தார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகவிட்டாலும் 300 சிறுவர்கள் தனிமைப்படுத்தல் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.