முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ச்சியாக மௌனம் காத்துவருவது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதென செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பிலோ அல்லது அதனை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்றிட்டங்கள் குறித்தோ, எவ்விதமான கருத்துகளையும் அவர் முன்வைக்கவில்லை என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி முன்னாள் சுகாதார அமைச்சராக அவர் இருந்தமையால், இதுதொடர்பில் கருத்து தெரிவித்திருக்க வேண்டும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இரண்டு தடவைகள் நடைபெற்ற சகல கட்சித் தலைவர்களின் கூட்டத்தில், மைத்திரிபால சிறிசேன பங்கேற்றிருந்த போதிலும் அமைதியாகவே அவர் இருந்துவிட்டார் என அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.