கொழும்பிலிருந்து தங்கல்லைக்குச் சென்று அங்கு நடந்துதிரிந்த கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அப்பெண், ஹம்பாந்தோட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்றைக்கு ஐந்து நாட்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து அப்பெண், பொருட்கள் ஏற்றியிறக்கும் வாகனத்தில், தங்கல்லைக்கு வந்துள்ளார்.
அந்தப் பெண், கடந்த ஐந்து நாட்களாக தங்கல்லை-ஹம்பாந்தோட்டை பிரதான வீதியில் நடந்து திரிந்துள்ளார்.
அப்பெண் நெட்லோ பிட்டிய பிரதேசத்தில் இன்று (11) காலை நடத்து சென்றுகொண்டிருந்த போதே கைது செய்யப்பட்டார்.
அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்கிறதா? என்பது தொடர்பிலான பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் வைத்தியசாலை அறிவித்துள்ளது.