ஜா எல பகுதியில் 52 பேரை இன்று தேடிப்பிடித்த கடற்படை அவர்களை தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக நேற்று அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு தேடிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
41 ஆண்கள் 5 பெண்கள் 6 சிறுவர்கள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். மாக்கோவிட்ட பகுதியில் மேலும் பலரை தேடும் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.