web log free
December 22, 2024

சகல சடலங்களையும் எரிக்கவும்- வர்த்தமானி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் சகலரின் சடலங்களையும் எரியூட்டுமாறு அறிவித்து விசேட வர்த்தமான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலை, நேற்று (11) வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரியூட்டப்பட்டமை தொடர்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.

தங்களுடைய மத சடங்குகளின் பிரகாரம், ஜனாஸாக்களை எரிக்கக் கூடாது என்றும் புதைப்பதற்கு வழிசமைக்குமாறும் முஸ்லிம் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்து வருகின்ற நிலையிலேயே சகல சடலங்களையும் எரியூட்டுமாறு பணித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள ஆளொருவரின் பூதவுடலின் தகனம்-

(1) அறுபத்தோராம் மற்றும் 62 ஆம் ஏற்பாடுகள் எதுஎவ்வாறிருப்பினும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பூதவுடல் சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க -

(அ) ஏதேனும் சாத்தியமான உயிரியல் அச்சுறுத்தலைத் தடுக்கும் நோக்கத்திற்கென முழுமையாக எரிவதற்கென ஆகக் குறைந்தது நாற்பத்தைந்து நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை 800 க்கும் 1200 க்குமிடையிலானபாகை செல்சியஸ் வெப்ப நிலையிலும் அத்துடன்

(ஆ) அத்தகைய அதிகாரியின் மேற்பார்வையின்கீழ் முறையான அதிகாரியினால் அங்கீகரிக்கப்படும் சுடலைஅல்லது இடத்திலும்,தகனம் செய்யப்படுதல் வேண்டும்.

(2) ஆளெவரும், கொறோனாவைரஸ் நோய் 2019 (கொவிட்-19) இனால் இறந்துள்ள அல்லது இறந்துள்ளதாகச்சந்தேகிக்கப்படும் ஆளொருவரின் பு{தவுடலை முறையானஅதிகாரியினால் பெயர் குறித்து நியமிக்கப்படும் தகனத்திற்கான அவசிய கடமைகளை பொறுப்பேற்கின்ற ஆட்கள் தவிர்ந்த வேறெவரேனும் ஆளுக்கு கையளித்தலாகாது.

(3) அத்தகைய சுடலை அல்லது இடத்தில் பூதவுடலைக் கையாளுகின்ற ஆட்களினால் பயன்படுத்தப்படும் உடை மற்றும் மீளபயன்படுத்தப்படற்பாலதல்லாத தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் தகனத்தின்போது சவப்பெட்டியுடன் அவற்றை இடுவதன் மூலம் எரிக்கப்படுதல் வேண்டும்.

(4) மீளபயன்படுத்தப்படற்பாலதான கருவியானது சுகாதாரப் பணிப்பாளர் தலைமையதிபதியினால் விடுக்கப்படும் பணிப்புகளுக்கு இணங்க முறையாக தூய்மையாக்கப்படுதலும் கிருமி நீக்கப்படுதலும் வேண்டும். (5) பூதவுடலின் சாம்பலானது, உறவினரின் வேண்டுகோளின் பேரில் அத்தகைய உறவினருக்கு கையளிக்கப்படலாம்.''.

Last modified on Sunday, 12 April 2020 12:10
© 2022 All Rights Reserved by Asian Mirror Pvt. Ltd