இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை தொடர்பிலான புதிய தரவுகளின் பிரகாரம் 214 பேருக்கு கொரோன தொற்றியுள்ளமை உறுதியாகியுள்ளது.
இதேவேளை 56 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி 7 பேர் மரணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றுக்கு உள்ளாகிவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், மார்ச் 20ஆம் திகதியன்று பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம், எதிர்வரும் 16ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.