ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவருமான உதய கம்பன்பில, அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி கூறுவதைப் போல, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதிக்கோ தற்போதை அரசாங்கத்துக்கோ எவ்விதமான அவசரமும் இல்லை.
ஐ.தே.க, ஜே.வி.பி விடுத்திருக்கும் அறிவிப்புக்கு பதிலளித்து கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் தொடர்பில், ஏப்ரல் 25ஆம் திகதி வரையிலும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எவ்விதமான அறிவிப்பையும் விடுக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
தேர்தலை ஒத்திவைத்தல் அல்லது தேர்தலை முன்கூட்டியே நடத்துதல் தொடர்பில் அரசாங்கத்தால் எவ்விதமான அறிவிப்பையும் விடுக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.